வட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம் 0
விடயமொன்றினை ஒரே நேரத்தில் 05 பேருக்கு மட்டுமே மீளஅனுப்பும் வகையில் (forward) வாட்ஸ்அப் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான இந்தக் கட்டுப்பாடு தற்போது உலகம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ்அப் ஊடாக பல்வேறு விதமான நம்பகத் தன்மையில்லாத செய்திகள், படங்கள் சமீபகாலமாக பரப்பப்படுகின்றன.