எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ: அமில மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு 0
கொழும்பு துறைமுகத்துக்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவல் ஏற்பட்ட எம்.வி எக்ஸ் ப்ரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது குறித்த கப்பல் முழுவதிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கடற்படை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.