சம்பந்தனின் இடத்துக்கு தெரிவான குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் 0
ஆர். சம்பந்தன் மரணமானதை அடுத்து, திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று (09) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இவர் பதவியேற்றார். திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன்,