துறைமுக நகர சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைதீன் தெரிவிப்பு 0
அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்பித்துள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தமது கட்சி வாக்களிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ். சுபைதீன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இம் மாதம் 04ஆம் திகதி நடைபெற்ற தமது கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குறித்த