காரைதீவு பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்: சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு 0
– நூருல் ஹுதா உமர் – தன்னை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் க. குமாரஸ்ரீ தெரிவித்தார். காரைதீவு பிரதேசசபை தவிசாளரின் ஊழல்கள், ஜனநாயக விரோத செயல்கள், அடக்குமுறைகள் தொடர்பில் சபை அமர்வுகளிலும், சபைக்கு வெளியேயும் தன்னுடைய எதிர்ப்பை ஆரம்பம்