கொரோனா சுமை: மூடப்படும் கோழிப் பண்ணைகள் 0
– யூ.எல். மப்றூக் – முட்டையிடும் சுமார் 09 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்ட மிகப்பெரிய 6 கோழிக் கூடுகளும் இன்று வெறுமையாக உள்ளன. நான்கு வருடங்களாக இந்த கோழிப்பண்ணையை நடத்தி வந்த எஸ்.எல். நசீம், கடந்த பெப்ரவரி மாதம் இதை இழுத்து மூடிவிட்டதாகக் கூறுகின்றார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஸ்ரப் நகரிலுள்ள தமது சொந்தக் காணியில்