போராட்டக்காரர்கள் கண்டெடுத்த பணத்தை, கோட்டாவிடம் ஒப்படைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரிப்பு 0
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையை 2022 ஆம் ஆண்டு கைப்பற்றி, பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கிருந்து கைப்பற்றப்பட்ட 20 மில்லியன் ரூபா பணத்தை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகே நிராகரித்து விட்டதாக லங்காதீப தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாரிய போராட்டத்தின்