அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம் 0
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீரமானம் எடுக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – இதற்கான யோசனையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.