ஊடகவியலாளர் லசந்தவைக் கொன்றவர்களின் உருவங்கள் வெளியாகின; பொதுமக்கள் தகவல் வழங்கலாம் 0
சிரேஸ்ட ஊடகவியலாளரும், சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான சந்தேச நபர்களின் உருவங்களையொத்த இரண்டு ஓவியங்களை வெளியிடப்பட்டுள்ளன. கொலையாளிகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெறும் நோக்கிலே மேற்படி ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் தொடர்பில் சாட்சிகள் தெரிவித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்படி ஓவியங்களைத் தயாரித்துள்ளனர்.