பாரிய தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; புதிய ஜனாதிபதி 2048ஐ கனவு காண்கிறார்: நடப்பவை வியப்பாக உள்ளது என்கிறார் றிசாட் 0
பாரிய ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் இன்னோரன்ன நாடுகளுக்கு முதலீட்டாளர்கள் படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று (07) கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். “முன்னாள் ஜனாதிபதி