இந்திய சினிமா இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் 0
புகழ்பெற்ற இந்திய சினிமா ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி. ஆனந்த் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 54 ஆகிறது. கே.வி. ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்துவந்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது.