ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க பிள்ளையானுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், கால அவகாசம் கோரி கடிதம் 0
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அழைத்திருந்த நிலையில், தனக்கு கால அவகாசத்தை வழங்குமாறு பிள்ளையான் கோரியுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.