300 கிலோகிராம் எடையுடைய கடலாமையுடன் நபரொருவர் கைது 0
மிகப் பெரிய கடலாமை ஒன்றினை தம்வசம் வைத்திருந்த ஒருவரை, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆமை சுமார் 300 கிலோகிராம் எடையுடையது என தெரிவிக்கப்படுகிறது. நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு ஆமையுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வசமிருந்து மீட்கப்பட்ட கடலாமை உயிருடன் உள்ளதால், நீதிமன்ற அனுமதியுடன் அதனை குறிகாட்டுவான்