காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 0
நாட்டிலுள்ள 25 பிரதேசங்களுக்கு காதி நீதிபதி பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 115) படி நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை, அனுராதபுரம், பேருவளை, ஹம்பாந்தோட்ட, ஏறாவூர், ஹற்றன், கேகாலை, கிண்ணியா, மாத்தறை, மூதூர் (கொட்டியாரபற்று), நாவலப்பிட்டிய, நிந்தவூர், நீர்கொழும்பு, ஓட்டமாவடி, பொலநறுவை, புட்மோட்டை, புத்தளம்