குப்பையுடன் சேர்த்து கழிவகற்றல் வண்டியில் போடப்பட்ட பெருந்தொகைப் பணம்; உரிமையாளருக்கு மீளக் கிடைத்தது: கல்முனையில் சம்பவம் 0
– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டில் இருந்து ஒப்படைக்கப்பட்ட குப்பைப் பொதியினுள் தெரியாமல் சென்றிருந்த 150,000 ரூபா பணம், அவ்வீட்டு உரிமையாளருக்கு மீளக்கிடைத்த சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை நகர மண்டப வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டு உரிமையாளர் இன்று தனது தங்க ஆபரணமொன்றை வங்கியில்