சம்பிக்க ரணவக்க கட்சியைச் சேர்ந்த கருணாரத்ன பரணவித்தான, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் 0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவித்தான இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தலதா அதுகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியியை ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கருணாரத்ன பரணவித்தான நியமிக்கப்பட்டுள்ளார். கருணாரத்ன பரணவித்தான கடந்த பொதுத் தேர்தலில் – தலதா அத்துகோரலவுக்கு அடுத்ததாக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.