கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள செயற்பாட்டில் திருப்தியில்லை; கல்வியமைச்சும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 0
– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். வெளி மாகாணங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர் குழுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று திங்கட்கிழமை (24) கொழும்பில் இடம்பெற்ற போது –