சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பு 0
நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கொள்ளளவு 290 வீதத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். டிசம்பர் 31, 2022 வரை, இலங்கை முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கக்கூடிய கைதிகளின் கொள்ளளவு 11,291 ஆகும், ஆனால் அந்தக் காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,176 என்று உபுல்தெனிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.