டொக்டர் ஷாபி கட்டாய கருத்தடை செய்தார் என, நான் ஒருபோதும் குற்றம்சாட்டவில்லை: விமல் வீரசன்ச தெரிவிப்பு 0
குருநாகல் வைத்தியசாலையின் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் – பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்தார் என தான் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகின்றமையை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மறுத்துள்ளார். ஒரு மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் இந்த விடயம் தொடர்பில் தான் கவலைகளை எழுப்பி, விசாரணை நடத்துமாறுதான் – தாம் கோரிக்கை விடுத்ததாகவும்