ஐ.நா செயலாளரை பதவி விலகுமாறு இஸ்ரேல் கடும் கோபத்துடன் அறிவிப்பு: பாதுகாப்பு சபையில் அவர் ஆற்றிய உரை காரணமானது 0
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாதுகாப்பு சபையில் ஆற்றிய உரை தொடர்பில் இஸ்ரேல் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, ஐ.நா செயலாளரைப் பதவி விலகுமாறும் அறிவித்துள்ளது. நியூயார்க்கில் நேற்று செவ்வாய்கிழமை (24) நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு சபை விவாதத்தில் பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உட்பட 87 பேர் உரையாற்றினர்.