ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே 0
கட்டாருக்கான இலங்கைத் தூதுவரும், கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியினை எதிர்பார்த்திருந்தவருமான ஏ.எஸ்.பி. லியனகே, மிகவும் ஏமாந்த நிலையில், தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அவரின் பீக்கொக் மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார். பிரபல வர்த்தகரான இவர், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.