அக்கரைப்பற்று; நீதவான் வீட்டுக் கொள்ளை தொடர்பில் 08 பேர் கைது: 528 கிராம் தங்க நகைகள் மீட்பு: தொடர்கிறது வேட்டை
– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீட்டில் கொள்ளையிடப்பட்ட அவரின் மனைவியினுடைய 12 பவுண் தாலிக் கொடியும், அதே பகுதியிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட 11