யாழ் பல்கலைக்கழகத்தில் இணைய வழி ராகிங்: ஆடைகளைக் கழற்றிக் ‘காட்டுமாறு’ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல் 0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடான பாலியல் பகிடிவதை (சைபர் ராகிங்) நடத்தப்பட்டு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சைபர் ராகிங் அதிகரித்துள்ளதாக வியாழனன்று தகவல் வெளியாகியிருந்தது. முதலாம் ஆண்டு மாணவர்கள், மூத்த