‘பொன்மனச் செல்வர்’ உதுமாலெப்பை; ஒரு நினைவுக் குறிப்பு 0
(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் உதுமாலெப்பை அவர்களுக்கான அனுதாபப் பிரேரணையொன்று, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி, உதுமாலெப்பை அவர்கள் தொடர்பான நினைவுகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தக் குறிப்பு எழுதப்படுகிறது) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.ஐ. உதுமாலெப்பை அவர்கள், அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இக்கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்புச் செய்த ஒருவராக