கொவிட் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை, வேண்டுமென்றே அரசாங்கம் இழுத்தடிக்கிறது: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு 0
கொரோனாவினால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கிய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை வேண்டுமென்று அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்எச்ஏ. ஹலீம் – கண்டியில் வைத்து குற்றம் சாட்டியுள்ளார். உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள போதிலும், போதிய வழிகாட்டுதல்கள் இல்லை என தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தாமதப்படுத்திவருகின்றது