Back to homepage

Tag "உள்ளூராட்சித் தேர்தல்"

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக கோருவதற்கு அமைச்சரவை அனுமதி

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக கோருவதற்கு அமைச்சரவை அனுமதி 0

🕔3.Sep 2024

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோரும் சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த வருடம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு, தேர்தலுக்கான தினமும் அறிவிக்கப்பட்டது. ஆயினும், தேர்தலை நடத்துவதற்கான நிதியில்லை என அரசாங்கம்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் 700 பேர் நாட்டில் இல்லை: 20 பேர் மரணம்

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் 700 பேர் நாட்டில் இல்லை: 20 பேர் மரணம் 0

🕔28.Aug 2024

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ​வேட்புமனு தாக்கல் செய்த ஏறக்குறைய 20 வேட்பாளர்கள் தற்போது உயிருடன் இல்லை எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள்  ஆணைக்குழு தகவல்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் 0

🕔24.Aug 2024

உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் இணைந்து, நீதிமன்றத் தீர்ப்பை அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ஏ. ரத்நாயக்க கூறியுள்ளார். இருந்தபோதிலும், ஜனாதிபதித்

மேலும்...
ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் நிலை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் நிலை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔14.May 2024

ஒத்திவைக்கப்பட்ட 2023ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் – செல்லுபடியற்றதா என ஆராயுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய, இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனையைப் பெறுமாறு, பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளதாக, இன்று (14) காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு 0

🕔23.Sep 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட சந்தர்ப்பமுள்ளதாக, ‘பஃப்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி; “நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் இது தொடர்பான தீர்மானம் அரசாங்கத்தினால்

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நடவடிக்கை: அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நடவடிக்கை: அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு 0

🕔28.Apr 2023

உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள், மீண்டும் அவர்களின் பணிக்குத் திரும்புவதற்கான அனுமதிமதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க வகும்புர இன்று (28) நாடாளுமுன்றில் தெரிவித்தார். அரச ஊழியர்கள் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள தேர்தல் தொகுதிகளை தவிர்த்து, வேறு பகுதிகளில் சேவையாற்றுவதற்கே அனுமதி

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி 0

🕔16.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாமல் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று (16) அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிலையம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத்

மேலும்...
‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை

‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை 0

🕔12.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா கூறியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை வெளியிடுவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔7.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீரமானித்துள்ளது. ஏற்கனவே மார்ச் 09ம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் நிதி கிடைக்காமை, வாக்குச் சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் உரிய திகதியில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம்

மேலும்...
பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம்

பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம் 0

🕔4.Mar 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கடந்தவாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய தவிசாளரை நியமிப்பது தொடர்பாக தற்போது இரண்டு முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும்...
தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வாரம்: நிதியைத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வாரம்: நிதியைத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔3.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான புதிய திகதி இன்று (03) அறிவிக்கப்படும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடினர். நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக தலைவர், பொலிஸ் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார்

உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார் 0

🕔28.Feb 2023

– சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் – உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை பலரும் கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் தேர்தல் சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை. தேர்தல் ஒத்திவைப்பதற்கான, சட்டத்தோடு தொடர்பில்லாத சாதாரண அறிவிப்பு மட்டும்தான் வெளியாகியுள்ளது. அது வெறும் தகவல் மாத்திரமே. அதற்கு எந்த சட்ட அந்தஸ்தும் இல்லை. தனியாக ‘உள்ளூராட்சித் தேர்தல்

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு 0

🕔28.Feb 2023

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் – இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது. தேர்லுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிடப்பட்ட நாளில் இல்லை: புதிய திகதி மார்ச் 03இல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிடப்பட்ட நாளில் இல்லை: புதிய திகதி மார்ச் 03இல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு 0

🕔24.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (24) அறிவித்தது. அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்

மேலும்...
வேட்பாளர்களை பாடசாலைக்கு அழைக்கும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் முறைப்பாடு

வேட்பாளர்களை பாடசாலைக்கு அழைக்கும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் முறைப்பாடு 0

🕔7.Feb 2023

– அஹமட் – உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரச பாடசாலைகளுக்கு அழைத்து – அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சில அதிபர்கள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அட்டாளைச்சேனையிலுள்ள அரச பாடசாலைகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து, அவர்களிடமிருந்து அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வைபவங்கள் நடந்துள்ளதாகவும் இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்