நெற் செய்கை உர மானியம் வழங்கல்: அம்பாறை மாவட்டத்திலிருந்து 14ஆம் திகதி ஆரம்பம் 0
நெற் செய்கையாளர்களுக்கான உர மானியமாக 25 ஆயிரம் ரூபாயை 14ஆம் திகதி தொடக்கம் வழங்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து இதனை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். “பெரும்போகம் தொடங்கப் போகிறது.