தொழிற் பயிற்சி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளராக ஜாபீர் நியமனம் 0
– யூ.கே. காலித்தீன் – இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வரும் ஆதம்பாவா அப்துல் ஜாபீர், கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான (கடமை நிறைவேற்று) பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்துக்கு முதன்முதலாக இப்பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரியும் இவராவார். 2010ம் ஆண்டு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் உதவிப் பணிப்பாளராக இணைந்து