ஆயர் பேரவைக்கும் கர்தினாலுக்கும் இடையில் கருத்து வேறுபாடில்லை; பிளவு உள்ளதாக காட்ட ஜனாதிபதி முயற்சி என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு 0
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை விடயத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரும், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் ஒரே கருத்தையே கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவை மேற்கோள்காட்டி – திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் ஈடுபாட்டுடன்