Back to homepage

Tag "இலங்கை"

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் சுவாரசியத் தகவல்கள்

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் சுவாரசியத் தகவல்கள் 0

🕔27.Aug 2024

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் இதுவரை 04 பெண்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். நாாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை விபரிக்கும் Manthri.lk, நாட்டின் கடந்த ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பான ஐந்து முக்கிய விடயங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில்தான் மேற்படி விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள 08 ஜனாதிபதித் தேர்தல்களின் போது, வெற்றியாளருக்கு தொடர்ச்சியாக வாக்களித்த ஒரே மாவட்டம் பொலன்னறுவையாகும். ஜனாதிபதித்

மேலும்...
97 வயதில் பட்டம் பெற்ற இலங்கைப் பெண் லீலாவதி

97 வயதில் பட்டம் பெற்ற இலங்கைப் பெண் லீலாவதி 0

🕔26.Aug 2024

இலங்கையைச் சேர்ந்த 97 வயதுப் பெண்ணொருவர் முதுகலையில் பட்டம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லீலாவதி தர்மரத்ன எனும் மேற்படி பெண், இம்மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் பௌத்தக் கல்வியில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லீலாவதி தர்மரத்ன, கல்விக்கு வயது ஒரு தடையல்ல

மேலும்...
சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட இலங்கை அணியில் ஏறாவூரின் 05 வீரர்கள்: தலைமைப் பொறுப்பும் ஏறாவூருக்கு

சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட இலங்கை அணியில் ஏறாவூரின் 05 வீரர்கள்: தலைமைப் பொறுப்பும் ஏறாவூருக்கு 0

🕔16.Aug 2024

– ஏறாவூர் நஸீர் – ISD – நேபாளத்தில் நடைபெறும் இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியில் – ஏறாவூரைச் சேர்ந்த 05 இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏறாவூரைச் சேர்ந்த எம்.எம். முன்சிப், எம்.டி.டிம். ஸகீ, ஐ.எம். தில்ஹாம், எஸ்.எம். பாதிக் மற்றும் ஏ.எம். அத்தீப் ஆகியோரே –

மேலும்...
ஹமாஸ் தலைவர் படுகொலையினால் ஏற்படக் கூடிய அழுத்தங்களை எதிர்கொள்ள, இலங்கையில் 03 குழுக்கள் நியமனம்

ஹமாஸ் தலைவர் படுகொலையினால் ஏற்படக் கூடிய அழுத்தங்களை எதிர்கொள்ள, இலங்கையில் 03 குழுக்கள் நியமனம் 0

🕔31.Jul 2024

ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு – முன் ஆயத்தமாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 விசேட குழுக்களை நியமிதுள்ளார். இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இலங்கையில் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இலங்கையில் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு 0

🕔26.Jul 2024

ஜனாதிபதித் தேர்தல் – செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றுள்ளார். ‘எக்ஸ்’ தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதோடு, ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்த அறிவிப்பு நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ‘ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் செப்டம்பர் 21ஆம்

மேலும்...
இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறு, தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறு, தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தல் 0

🕔11.Jul 2024

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் நேற்று (10)  இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்திப்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகளுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் தமது நன்றிகளை தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைத்துக்கொடுத்த 50,௦௦௦

மேலும்...
சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்தானது

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்தானது 0

🕔26.Jun 2024

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கிடையில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நிகழ்வுகள் இன்று (26) பீஜிங் மற்றும் கொழும்பில் நடைபெற்றன. இந்த மறுசீரமைப்பினால் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணங்கள் கிடைக்கும் என்பதோடு, அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்காக – அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவும், நாட்டின் உட்கட்மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான

மேலும்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு 0

🕔20.Jun 2024

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்

மேலும்...
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔17.Jun 2024

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியடைந்துள்ளதாகவும், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கிணங்க, அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 12%

மேலும்...
ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர் குறித்து நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல்

ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர் குறித்து நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔14.Jun 2024

ராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக – வெளிநாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல் ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான

மேலும்...
ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு

ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு 0

🕔27.May 2024

க.பொ.த உயர்தர தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுத்திகதி ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், தகுதியான

மேலும்...
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்: கவலை தெரிவித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திடீர் மரணம்: கவலை தெரிவித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை 0

🕔27.May 2024

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் (Jean- François Pactet) இலங்கையிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலமானார். ராஜகிரியவில் உள்ள அவரின் இல்லத்தில் அவர் நேற்று (26) காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு வயது 53 ஆகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் தூதுவரின் மறைவுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று தனது ஆழ்ந்த

மேலும்...
சொத்துக்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவு

சொத்துக்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவு 0

🕔25.May 2024

அரச நிறுவனங்கள் மற்றும் இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

மேலும்...
இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல்

இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல் 0

🕔19.May 2024

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் ), கொழும்பு – 02 முத்தையா வீதியிலுள்ள வர்த்தக நிலையத்துக்குஅருகில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 33 வயது இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிறத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கொழும்பு அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட

மேலும்...
இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்

இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல் 0

🕔28.Apr 2024

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை அதேவேளை வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை, தற்போது 280,000 ஆகக் குறைந்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்