தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி 0
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை – கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர்