பாடசாலை ஆரம்ப வகுப்புகள் அனைத்தும் நாளை ஆரம்பம்: சீருடை அவசியமில்லை 0
பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகள் அனைத்தும் (25) நாளை மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் தமது சீருடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய கட்டாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் பல மாணவர்களுக்கு தம்மிடமுள்ள சீருடைகளை அணிய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.