வக்கற்ற ஹரீஸ் எம்.பி, அஷ்ரப்பை விற்கக் கூடாது: அசாத் சாலி காட்டமான அறிக்கை 0
அரசியல் பிழைப்புக்காக பெருந்தலைவர் அஷ்ரப்பை பண்டப்பொருளாக கூவி விற்கும் அரசியலை, ஹரீஸ் எம்.பி. உடனடியாக கைவிட வேண்டுமென, மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பதற்கு, ஹரீஸ் எம்.பி. எடுக்கும் முயற்சிகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில் அசாத் சாலி, அறிக்கையொன்றின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.