அறுவைக்காடு குப்பை பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேச்சு; பாதிப்பு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவு 0
புத்தளம், அறுவைக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படப்போகும் பாதிப்புக்களை இரண்டு வார காலத்திற்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும், அதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் புத்தளம் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை மாலை உறுதியளித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில், புத்தளம் மாவட்ட