மைத்திரியின் ‘கள்ளத்தனமாக சந்திப்பு’ குறித்து, அமைச்சர் ராஜித விளக்கம் 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பானது, கள்ளத்தனமானது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதிக்கும், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.