சாய்ந்தமருது நபரின் உடலை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு, கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு 0
– ஏ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்ததாகக் கூறப்படும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். ஆதம்பாவா என்பவரின் உடலை எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி வரை தகனம் செய்யாமல், அவ்வாறாவே வைத்திருக்க வேண்டும் என, கல்முனை மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது. குறித்த உடல் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.