தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி 0
– அஹமட் – அரசியலை சாக்கடை என்று பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் அந்த சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதனை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இருந்த போதும், இவ்வாறு விமர்சிக்கப்படும் அரசியலுக்குள் வாய்மை தவறாத நல்ல மனிதர்களும் இல்லாமல் இல்லை. அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் வட மாகாணத்துக்கு பயணமொன்றினை மேற்கொண்ட