அம்பாறை பொது மருத்துவமனையில் இதயநோய் சத்திர சிகிச்சைப் பிரிவை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் 0
அம்பாறை பொது மருத்துவமனையின் நீர்மமேற்று ஆய்வுகூடத்துடன் (Catheter Laboratory ) கூடிய இதயநோய் சிகிச்சைப் பிரிவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் இது தொடர்பில் சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இதய நோய்களுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் இதயநோயால் இறக்கின்றவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் படிப்படியாக அதிகரித்துள்ளது.