சற்சொரூபவதி நாதனின் செய்தி வாசிப்பில் தனியான பாணி இருந்தது: அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: அமைச்சர் றிசாத் பதியுதீன் 0
இலங்கையின் செய்தித்துறை வரலாற்றில் பல ஜாம்பவான்களை உருவாக்கிய மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதனின் மறைவு, ஒலிபரப்புத்துறையில் ஈடு செய்ய முடியாததென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சற்சொரூபவதி நாதனின்ம றைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது; சற்சொரூபவதி நாதன் பன்முக புலமை கொண்ட ஒர் ஒலிபரப்பாளர்.