போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டோம்; சீரழிகிறது வாழ்க்கை: சொந்த மாவட்டத்துக்கு மாற்றல் வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உருக்கம் 0
கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு அங்குள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றி வரும் தங்களுக்கு, தமது சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினைப் பெற்றுத் தருமாறு, சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்முனை ஊடக மையத்தில் நேற்று (12) நடத்திய ஊடகவியலாளர்