பெண் சிறைக் கைதிகளுக்கு, தையல் பயற்சி நெறி 0
– எப். முபாரக் – திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகளுக்கான தையல் பயிற்சி நெறி இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறைச்சாலைகளிலுள்ள பெண்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் வகையில், இந்தப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு, திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் பிரசாத் ஹேமந்த தலைமையில், சிறைச்சாலையில் நடைபெற்றது.