42 வாகனங்கள் பாவிக்கப்படாத நிலையில் 03 அதிரடிப்படை முகாம்களில் கிடப்பதாக, கணக்காய்வு அறிக்கையில் அம்பலம் 0
மூன்று விசேட அதிரடிப்படை முகாம்களில் 2017ஆம் ஆண்டு முதல் கொள்வனவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வாகனங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் திட்டத்தின் பணிகளுக்காக வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேற்கூறிய வாகனங்கள் மற்றும் பிற பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்க ஐந்து ஆண்டுகளில்