‘அரைகுறை நிலையிலுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் திறப்பு விழாவை நிறுத்து’: கிழக்கு ஆளுநருக்கு எதிராக அட்டாளைச்சேனையில் கறுப்புக் கொடிப் போராட்டம் 0
– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கென நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடிக் கட்டடம் பூரணப்படுத்தப்படாத நிலையில் இருக்கத்தக்கதாக, அதனை இன்று (19) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அப்பிரதேச மக்கள் ‘கறுப்புக் கொடி போராட்டத்தை’ ஆரம்பித்துள்ளனர். மேலும், கட்டட திறப்பு விழாவுக்காக – ஆளுநர்