அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம் 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதே சபைக்குச் சொந்தமான அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டமை காரணமாக கடந்த 08 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 யானைகள் உயிரிழந்துள்ளன என, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் குறித்த குப்பை மேட்டில் யானையொன்று உயியிழந்தமை குறிப்பிடத்தக்கது. குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக்