சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு 0
அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குத் சொந்தமான “எம்.எஸ். லங்கா“ (MS LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நலையில், கடந்த 09 வருடங்களாக அக்கரைப்பற்றில் இயங்கி வந்த தனது நிறுவனம் இடைநிறுத்தப்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியல் தலையீடுதான் காரணம் என, சபீஸ் குற்றஞ்சாட்டுகிறார்.