ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா 0
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு பேரழிவு தருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு ஆதரவை கோருவதாகவும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் இன்று (10) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. “பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் மற்றும் பங்காளர்கள் முக்கியமான உதவிகளை வழங்குவதிலும் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதிலும் களத்தில் உள்ளனர்”