சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட அரச இல்லம் மீளக் கையளிக்கப்படவில்லை: மின்சாரம், நீர் துண்டிப்பு

சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட அரச இல்லம் மீளக் கையளிக்கப்படவில்லை: மின்சாரம், நீர் துண்டிப்பு 0

🕔12.Nov 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட அரச இல்லம் இதுவரை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. 2024 ஜனவரி 25 அன்று கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தை அடுத்து காலமான சனத் நிஷாந்த, மேற்படி வீட்டிலேயே மரணிப்பதற்கு முன்னர் தங்கியிருந்தார். அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க பிள்ளையானுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், கால அவகாசம் கோரி கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க பிள்ளையானுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், கால அவகாசம் கோரி கடிதம் 0

🕔12.Nov 2024

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அழைத்திருந்த நிலையில், தனக்கு கால அவகாசத்தை வழங்குமாறு பிள்ளையான் கோரியுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும்...
பொலிஸ் நிலைய தடுப்புக் காவல் அறையில், சந்தேக நபர்களை சூதாட அனுமதியளித்த பொலிஸாருக்கு பிணை

பொலிஸ் நிலைய தடுப்புக் காவல் அறையில், சந்தேக நபர்களை சூதாட அனுமதியளித்த பொலிஸாருக்கு பிணை 0

🕔12.Nov 2024

பொலிஸ் நிலைய தடுப்புக் காவல் அறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் குழுவொன்றினருக்கு சூது விளையாட அனுமதியளித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் – கிரனேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் –

மேலும்...
தேர்தல் கடமைகளில் 70 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் கடமைகளில் 70 ஆயிரம் பொலிஸார் 0

🕔12.Nov 2024

பொதுத் தேர்தலின் போது அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சுமார் 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (12) முதல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். “நாட்டில் 13,383 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்திலும் தேர்தல் நடைபெறும் நாளிலும் அதற்கு மறுநாளிலும், தேவைப்பட்டால், அதற்குப்

மேலும்...
கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தேர்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தேர்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது 0

🕔11.Nov 2024

கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினர் இன்று (11) கைது செய்துள்ளனர். தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரை மேற்படி

மேலும்...
சமூக ஊடகங்களில் அபேட்சகர்களை இழிவுபடுத்தும் நடவடிக்கை அதிகரித்துள்ளன: ‘கபே’ தெரிவிப்பு

சமூக ஊடகங்களில் அபேட்சகர்களை இழிவுபடுத்தும் நடவடிக்கை அதிகரித்துள்ளன: ‘கபே’ தெரிவிப்பு 0

🕔11.Nov 2024

– பாறுக் ஷிஹான் – “சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்க வேண்டும். வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும் – ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டும்” என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான ‘கபே’ அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார். ‘கபே’

மேலும்...
அரிசி பற்றாக்குறை செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு குற்றச்சாட்டு

அரிசி பற்றாக்குறை செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு குற்றச்சாட்டு 0

🕔11.Nov 2024

அரிசி ஆலை உரிமையாளர்கள், உள்ளூர் சந்தையில் ‘நாடு’ அரிசியின் பற்றாக்குறையை செயற்கையாக ஏற்படுத்தி, விலையை உயர்த்த முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. நாட்டுக்குள் போதுமான அரிசி கையிருப்பு இருப்பதை உறுதி செய்த நுகர்வோர் விவகார அதிகார சபையன் அறிக்கையைத் தொடர்ந்து அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதேவேளை, இப்பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என

மேலும்...
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த வருடம் வரையில் 1.8 பில்லியன் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிப்பு

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த வருடம் வரையில் 1.8 பில்லியன் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிப்பு 0

🕔11.Nov 2024

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.8 பில்லியன் ரூபாய் வரியை பாக்கியாக செலுத்தாமல் உள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது 30 நொவம்பர் 2024க்குள் வரி பாக்கியை செலுத்துமாறு மதுபான உற்பத்தியாளர்களுக்கு கலால் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தாத வரியின் மொத்தத் தொகை 8.5 பில்லியன் ரூபாய்

மேலும்...
தோட்டத் தொழிலாளர்களிடம் ஜே.வி.பி மன்னிப்பு கோர வேண்டும்: ரணில்

தோட்டத் தொழிலாளர்களிடம் ஜே.வி.பி மன்னிப்பு கோர வேண்டும்: ரணில் 0

🕔10.Nov 2024

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐ.தே.க சார்பில் நான் உரையாற்றும் முதலாவது தேர்தல் கூட்டம் இதுவாகும். நாங்கள் வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும், நுவரெலியாவில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று

மேலும்...
சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரம, சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பணி இடைநீக்கம்

சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரம, சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பணி இடைநீக்கம் 0

🕔10.Nov 2024

சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரமவை சட்டமா அதிபர் திணைக்களம் பணி இடைநிறுத்தம் செய்துள்ளது. ஷவீந்திர விக்ரம தனது மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்டார். ,இவர் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவராவார். ஷவீந்திர விக்ரமவின் பணி இடைநீக்கத்துக்கு பொதுச் சேவைகள் ஆணைக்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை, லஞ்ச,

மேலும்...
த்ரிபோஷ நிறுவனத்தை மூடும் திட்டம் கிடையாது

த்ரிபோஷ நிறுவனத்தை மூடும் திட்டம் கிடையாது 0

🕔9.Nov 2024

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவான த்திரிபோஷவை உற்பத்தி செய்யும், ஸ்ரீலங்கா த்ரிபோஷ லிமிடெட் நிறுவனம் மூடப்பட உள்ளதாகக் கூறப்படும் செய்திகள் தவறானவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிதியமைச்சு, த்ரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு – எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும்

மேலும்...
கற்றல் உபகரணங்களுக்காக மாணவர்களுக்கு கொடுப்பனவு: ஜனவரியில் வழங்கப்படும் என்கிறார் ஜனாதிபதி

கற்றல் உபகரணங்களுக்காக மாணவர்களுக்கு கொடுப்பனவு: ஜனவரியில் வழங்கப்படும் என்கிறார் ஜனாதிபதி 0

🕔8.Nov 2024

பாடசாலை கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதியில் புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். கேகாலையில் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து

மேலும்...
03 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்து

03 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்து 0

🕔8.Nov 2024

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் இந்த வருடத்தில் இதுவரை நீதிமன்றங்களால் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக – மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு

மேலும்...
பெண் அதிபருக்கு விளக்க மறியல்

பெண் அதிபருக்கு விளக்க மறியல் 0

🕔8.Nov 2024

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட – ராகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் பெண் அதிபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலாம் தரத்துக்கு தனது பிள்ளையை அனுமதித்தமைக்காக பெற்றோரிடமிருந்து 150,000 ரூபா பணம் பெறுவதற்கு முயற்சித்த போது, அவர் கைது செய்யப்பட்டார். மேற்படி அதிபர் இன்று (08) கொழும்பு

மேலும்...
32 ஆயிரம் மாதிரி வாக்குச் சீட்டுகளுடன் கல்முனையில் இருவர் கைது

32 ஆயிரம் மாதிரி வாக்குச் சீட்டுகளுடன் கல்முனையில் இருவர் கைது 0

🕔8.Nov 2024

– பாறுக் ஷிஹான் – சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் – அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்துக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். கல்முனை காசிம் வீதி பகுதியில், அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் அலுவலகத்துக்கு இந்த சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்