மூவர் தவிர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் மீள அழைப்பு

மூவர் தவிர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் மீள அழைப்பு 0

🕔27.Sep 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீள அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீள அழைக்கப்படவில்லை. பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திரும்பப் பெறுவது குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் தேவையற்ற

மேலும்...
இம்தியாஸ், கபீர் ஆகியோருக்கு முக்கிய பதவிகள்

இம்தியாஸ், கபீர் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் 0

🕔27.Sep 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பதவி வகித்த சரத் பொன்சேகா, கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டமையின் காரணமாக, அவர் வகித்த தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதேவேளை, ஐக்கிய

மேலும்...
உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு, முன்னாள் அமைச்சரகளுக்கு உத்தரவு

உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு, முன்னாள் அமைச்சரகளுக்கு உத்தரவு 0

🕔27.Sep 2024

முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அரசு வழங்கிய உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து – உடனடியாக வெளியேறி, அவற்றினை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்களுக்கு பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் நேற்று (27) அறிவித்தது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு கிட்டத்தட்ட 50 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதிலும், அரசின் மாதிவெல

மேலும்...
பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிட வருமாறு, அதாஉல்லாவுக்கு ஹக்கீம் தூது

பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிட வருமாறு, அதாஉல்லாவுக்கு ஹக்கீம் தூது 0

🕔27.Sep 2024

– மரைக்கார் – தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை, தங்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட வருமாறு – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தூது அனுப்பியுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின்

மேலும்...
மன்னாரில் பாடசாலைகளுக்கு அண்மித்துள்ள மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் றிஷாட் கோரிக்கை

மன்னாரில் பாடசாலைகளுக்கு அண்மித்துள்ள மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் றிஷாட் கோரிக்கை 0

🕔27.Sep 2024

மன்னாரில் பாடசாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதியை அண்மித்து திறக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது முன்னைய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது எனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள

மேலும்...
துப்பாக்கிகளை வைத்திருந்த மூன்று நபர்கள், வெவ்வேறு இடங்களில் கைது

துப்பாக்கிகளை வைத்திருந்த மூன்று நபர்கள், வெவ்வேறு இடங்களில் கைது 0

🕔27.Sep 2024

ரி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர், நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுங்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமெடில்ல பகுதியில் உள்ள கடை ஒன்றின் மேல் மாடியில் இருந்து – நேற்றிரவு ரி-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கியின் வரிசை எண் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது

மேலும்...
முன்னைய முறைமையில் வீசா வழங்கும் நடைமுறை, நேற்று நள்ளிரவு முதல் அமுல்

முன்னைய முறைமையில் வீசா வழங்கும் நடைமுறை, நேற்று நள்ளிரவு முதல் அமுல் 0

🕔27.Sep 2024

வீசா வழங்குவதில் முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட முறையை நேற்று (26) நள்ளிரவு முதல் உத்தியோகபூர்வமாக மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சர்ச்சைக்குரிய வி.எஃப்.எஸ் வீசா முறைமை நிறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வருகைதரும் போது வழங்கப்படும் நுழைவு அனுமதியானது, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. சுற்றுலாப் பயணிகளிடம் வீசா

மேலும்...
மு.கா உயர்பீடக் கூட்டத்தில் களேபரம்: ஹக்கீமை கடுமையாக சாடிவிட்டு, இடைநடுவில் வெளியேறினார் பைசல் காசிம்

மு.கா உயர்பீடக் கூட்டத்தில் களேபரம்: ஹக்கீமை கடுமையாக சாடிவிட்டு, இடைநடுவில் வெளியேறினார் பைசல் காசிம் 0

🕔26.Sep 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று (26) நடைபெற்றபோது, அங்கு கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்ற நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கூட்டத்தைப் புறக்கணித்து இடைநடுவில் வெளியேறியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இன்று (26) பிற்பகல் – கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கும் ராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் தொடர்பு இருந்தது: சிஐடி முன்னாள் பணிப்பாளர் ஷானி உறுதிப்படுத்தினார்

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கும் ராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் தொடர்பு இருந்தது: சிஐடி முன்னாள் பணிப்பாளர் ஷானி உறுதிப்படுத்தினார் 0

🕔26.Sep 2024

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் முக்கிய தருணங்களின் போது, சிஐடியினரை (குற்றப் புலனாய்வு திணைக்களத்தை) ராணுவ புலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள் என, சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகர தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சுனந்த தேசப்பிரியவின் நூல் வெளியீட்டின் நிகழ்வில் நேற்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கும் புலனாய்வு

மேலும்...
வட போச்சே: 85 எம்.பிகளுக்கு ஓய்வூதியம் இல்லை

வட போச்சே: 85 எம்.பிகளுக்கு ஓய்வூதியம் இல்லை 0

🕔26.Sep 2024

முன்னைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் கலைக்கப்பட்டமையினால், 85 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது.  1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற வேண்டுமாயின் 05 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும்.  இது இவ்வாறிருக்க, தற்போது

மேலும்...
ஹரீஸ், பைசலுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கக் கூடாது; அவர்கள் முன்பாக, ஹக்கீமிடம் தவம் வலியுறுத்தல்

ஹரீஸ், பைசலுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கக் கூடாது; அவர்கள் முன்பாக, ஹக்கீமிடம் தவம் வலியுறுத்தல் 0

🕔26.Sep 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்று உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோருக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல். தவம் – கட்சித் தலைவர்

மேலும்...
பஜுருத்தீனின் அறிவாற்றல், சமூகத்துக்கு பல்வேறு வகைகளில் உதவியுள்ளது: அனுதாபச் செய்தியில் நஸார் ஹாஜி தெரிவிப்பு

பஜுருத்தீனின் அறிவாற்றல், சமூகத்துக்கு பல்வேறு வகைகளில் உதவியுள்ளது: அனுதாபச் செய்தியில் நஸார் ஹாஜி தெரிவிப்பு 0

🕔26.Sep 2024

அட்டாளைச்சேனையை வசிப்பிடமாகவும் மருதமுனையைப் பிறப்பிடமாகவும் கொண்ட சிரேஷ்ட திட்டமிடல் உத்தியோகத்தர் ஐ.எல். பஜுருத்தீனுடைய மறைவு, சமூகத்துக்கு மிகப்பெரும் இழப்பு என்றும், அவருடைய அறிவாற்றல் சமூகத்துக்கு பல்வேறு வழிகளில் உதவியது எனவும் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவரும் தொழிலதிபருமான நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் பஜுருத்தீன் நேற்று (25) கடமை

மேலும்...
ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்; முஸ்லிம் ஒருவரும், ஒரு தமிழரும் உள்ளடக்கம்

ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்; முஸ்லிம் ஒருவரும், ஒரு தமிழரும் உள்ளடக்கம் 0

🕔25.Sep 2024

புதிய மாகாண ஆளுநர்களை – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு: மத்திய மாகாணம் – பேராசிரியர் சரத் அபேகோன் (முன்னாள் துணைவேந்தர், பேராதனைப் பல்கலைக்கழகம்) தென் மாகாணம் – பந்துல ஹரிச்சந்திர (முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி) வடக்கு

மேலும்...
பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக தெரிவாகும் எம்.பிகள் எண்ணிக்கை; கம்பஹாவில் அதிகம், திருகோணமலையில் குறைவு

பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக தெரிவாகும் எம்.பிகள் எண்ணிக்கை; கம்பஹாவில் அதிகம், திருகோணமலையில் குறைவு 0

🕔25.Sep 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அதிக நாடாளுமன்ற உறுப்பினர் (19 பேர்) கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளனர். அதேவேளை, குறைந்தளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்டத்திலிருந்து

மேலும்...
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிய, குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு விளக்க மறியல்

உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிய, குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு விளக்க மறியல் 0

🕔25.Sep 2024

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்க மறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. இலத்திரனியல் முறையில் வீசா விநியோகிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி – உச்ச நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவிற்கு அமைவாக செயற்படத் தவறியதால் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்