அனுரவின் ஆட்சியை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது; சீன உர்குத் முஸ்லிம்களின் நிலை, இங்கும் வர வேண்டுமா: றிஷாட் பதியுதீன்

அனுரவின் ஆட்சியை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது; சீன உர்குத் முஸ்லிம்களின் நிலை, இங்கும் வர வேண்டுமா: றிஷாட் பதியுதீன் 0

🕔3.Sep 2024

“அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியைக் கற்பனை செய்யவே பயமாக உள்ளது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல் வாழ்வில் எதையுமே செய்யாத அனுரகுமார திஸாநாயக்க – ஆட்சிக்கு வந்தால், எதையும் எதையும் செய்ய மாட்டார் எனவும் அவர் கூறினார். “தொப்பி அணிந்த ஒருவரை மௌலவியாகக் காண்பித்து,

மேலும்...
நாடாளுமன்றில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்றில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம் 0

🕔3.Sep 2024

நாடாளுமன்றில் இன்று (03) மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. பரஸ்பர அங்கீகாரம், பதிவு செய்தல் மற்றும் வெளிநாட்டு தீர்ப்புகளை அமுல்படுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டமூலம், மற்றும் தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம் திருத்தச் சட்டமூலம் ஆகியவைவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியங்கள் திருத்தச் சட்டமூலமானது, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔3.Sep 2024

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும்

மேலும்...
அனைத்து விவசாயக் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு

அனைத்து விவசாயக் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு 0

🕔3.Sep 2024

விவசாய செயற்பாடுகளுக்காக விவசாயிகள் பெற்றுக் கொண்ட அனைத்து பயிர்ச்செய்கைக் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று – விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க -சுயேட்சை வேட்பாளராக

மேலும்...
வாகனம் ஓட்டிய வயது குறைந்த மகன், அனுமதித்த சட்டத்தரணி தந்தை ஆகியோருக்கு தண்டம்: வீடியோவினால் சிக்கினர்

வாகனம் ஓட்டிய வயது குறைந்த மகன், அனுமதித்த சட்டத்தரணி தந்தை ஆகியோருக்கு தண்டம்: வீடியோவினால் சிக்கினர் 0

🕔3.Sep 2024

பதினைந்து வயதுடைய தனது மகனை – தெற்கு அதிவேக வீதியில் கார் ஓட்ட அனுமதித்த சட்டத்தரணி மற்றும் காரை ஓட்டிய அவரின் மகனுக்கு 55,000 ரூபாயை தண்டமாக விதித்து பாணந்துறை பிரதான நீதவான் சம்பிகா ராஜபக்ஷ தீர்ப்பளித்தார். புத்தளத்தில் வசிக்கும் 42 வயதுடைய சட்டத்தரணி மற்றும் அவரின் மகனுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில்

மேலும்...
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், ஊடங்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், ஊடங்களுக்கு எச்சரிக்கை 0

🕔3.Sep 2024

தேர்தல் சட்டங்களை பின்பற்றாத ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க; தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களை மாத்திரம் விளம்பரப்படுத்தும் சில ஊடகங்களுக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரதான ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு – வேட்பாளர்களின் பிரசாரம்

மேலும்...
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணை அறிவிப்பு

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணை அறிவிப்பு 0

🕔3.Sep 2024

இம்மாதம் 15 திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணையினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதலாம் பாகம் காலை 11.15 மணி முதல் 12.15 மணிவரையிலும் நடைபெறும். பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேடு, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக கோருவதற்கு அமைச்சரவை அனுமதி

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக கோருவதற்கு அமைச்சரவை அனுமதி 0

🕔3.Sep 2024

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோரும் சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த வருடம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு, தேர்தலுக்கான தினமும் அறிவிக்கப்பட்டது. ஆயினும், தேர்தலை நடத்துவதற்கான நிதியில்லை என அரசாங்கம்

மேலும்...
சம்பிக்க ரணவக்க கட்சியைச் சேர்ந்த கருணாரத்ன பரணவித்தான, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

சம்பிக்க ரணவக்க கட்சியைச் சேர்ந்த கருணாரத்ன பரணவித்தான, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் 0

🕔3.Sep 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவித்தான இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தலதா அதுகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியியை ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கருணாரத்ன பரணவித்தான நியமிக்கப்பட்டுள்ளார். கருணாரத்ன பரணவித்தான கடந்த பொதுத் தேர்தலில் – தலதா அத்துகோரலவுக்கு அடுத்ததாக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்