பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு

பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு 0

🕔7.Apr 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அவரின் பதவிக்காலம் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 26ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இந்த சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
கோதுமை, எரிவாயு விலைகள் குறைந்துள்ள போதும் ஹோட்டல், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை: மக்கள் புகார்

கோதுமை, எரிவாயு விலைகள் குறைந்துள்ள போதும் ஹோட்டல், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை: மக்கள் புகார் 0

🕔6.Apr 2023

– அஹமட் – கோதுமை மா மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலைகள் கணிசமானளவு குறைந்துள்ள போதிலும் – ஹோட்டல் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள் குறைவடையவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோதுமை மா சில்லறையாக – ஒரு கிலோ 380 ரூபாவுக்கு விற்கப்பட்டபோது ஹோட்டல் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்கள் என்ன விலைக்கு

மேலும்...
ரணிலுக்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு 0

🕔6.Apr 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும், கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாக ஆதரவளிக்கவுள்ளதாகவும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று (06) தெரிவித்தார். “யார் என்ன சொன்னாலும் ஹர்ஷ டி சில்வா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க

மேலும்...
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்த தீர்மானம்

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்த தீர்மானம் 0

🕔6.Apr 2023

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கிவ்ஆர் (QR) எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளன. இதற்கிடையில், அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் செய்தியில், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் தாங்கியில்

மேலும்...
“நாடு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டமைக்கு இனவாதிகளும், சில மதகுருகளுமே காரணம்”: பொன்மலைக் குடா விவகாரம் தொடர்பில் றிசாட் குற்றச்சாட்டு

“நாடு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டமைக்கு இனவாதிகளும், சில மதகுருகளுமே காரணம்”: பொன்மலைக் குடா விவகாரம் தொடர்பில் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔6.Apr 2023

புல்மோட்டை – அரிசிமலை பிரதேசத்திலுள்ள பொன்மலைக் குடா பகுதியில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனவாத விஸ்தரிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றில் நேற்று முன்தினம் (04) உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், இனவாத மற்றும் மதவாதப்  போக்குகளினாலேயே நாட்டின் பொருளாதாரம் கையேந்தும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்; “இதுவரை காலமும் ஆட்சியமைத்தவர்களும் ஆட்சியமைக்க துடித்தவர்களும், பேரினவாத சிந்தனையோடு இனவாதத்தை

மேலும்...
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, டயானா கமகே எம்.பி ஆகியோருக்கு இடையில் சண்டை

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, டயானா கமகே எம்.பி ஆகியோருக்கு இடையில் சண்டை 0

🕔6.Apr 2023

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற இளைஞர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பை அதிகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுக் கூட்டத்தில் இந்த சண்டை நடந்துள்ளளது. குழு அறையை விட்டு வெளியேறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டயானா

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சமர்ப்பிப்பதை ஒத்தி வைக்கத் தீர்மானம்: நீதியமைச்சர் தகவல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சமர்ப்பிப்பதை ஒத்தி வைக்கத் தீர்மானம்: நீதியமைச்சர் தகவல் 0

🕔6.Apr 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு – இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதன்படி, இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ

மேலும்...
ஜனாதிபதியை நாடாளுமன்றில் தெரிவு செய்த ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு

ஜனாதிபதியை நாடாளுமன்றில் தெரிவு செய்த ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு 0

🕔5.Apr 2023

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவிக்காக, நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கு 20.07.2022 அன்று நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளே – அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 23ஆம் திகதியன்று

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான தீர்மானம், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான தீர்மானம், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் 0

🕔5.Apr 2023

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான தீர்மானம், ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஜனக ரத்நாயக்கவுக்கு நிதியமைச்சு இரண்டு பக்க குற்றப்பத்திரிகையை அனுப்பியது. பதிலுக்கு 25 பக்கங்கள் கொண்ட பதிலை வழங்கியதாக தான் அனுப்பி வைத்ததாக ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும்...
கைது செய்யப்பட்ட அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், பிணையில் விடுவிப்பு 0

🕔5.Apr 2023

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நியூயோர்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார். அமெரிக்க ஜனாதிபதிகள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்துக்கு

மேலும்...
மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔4.Apr 2023

மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை குறைவடைந்தமை போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கேற்ப மின் கட்டணத்தையும்

மேலும்...
எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிப்பு: மோட்டார் சைக்கிள்களுக்கு 07 லீட்டர் வரை வழங்கப்படும்

எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிப்பு: மோட்டார் சைக்கிள்களுக்கு 07 லீட்டர் வரை வழங்கப்படும் 0

🕔4.Apr 2023

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று நள்ளிரவு தொடக்கம் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீட்டராக வழங்கப்பட்ட எரிபொருள் 08 லீட்டராக வழங்கப்படவுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கு 04 லீட்டரில் இருந்து

மேலும்...
ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு: அப்படியொரு தீர்மானம் இல்லை என்கிறார் பந்துல

ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு: அப்படியொரு தீர்மானம் இல்லை என்கிறார் பந்துல 0

🕔4.Apr 2023

ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுவதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டதாக, நிகழ்ச்சியொன்றின் போது அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்து என்ன தேர்தல் நடத்துவது என்பது உறுதியாகத் தெரியவில்லை

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் தடை

ஹரின், மனுஷ ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றம் தடை 0

🕔4.Apr 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் நுகேகொட மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஒழுக்காற்று குழுவின் தலைவர் ஆகியோருக்கு எதிராகவே

மேலும்...
லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையைக் குறைத்தது: ஆனால் லிட்ரோ அளவுக்கு இல்லை

லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையைக் குறைத்தது: ஆனால் லிட்ரோ அளவுக்கு இல்லை 0

🕔4.Apr 2023

லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையை இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 1,290 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய

மேலும்...